5 பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட வழிகாட்டி: குவியும் பாராட்டு!

5 பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட வழிகாட்டி: குவியும் பாராட்டு!
5 பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட வழிகாட்டி: குவியும் பாராட்டு!
Published on

ஜம்மு காஷ்மீரில், 5 பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட, சுற்றுலா வழிகாட்டியின் வீரத்தை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியை சேர்ந்தவர் ரூப் அகமது தர் (Rouf Ahmed Dar). இவர் பகல்ஹாம் (Pahalgham) பகுதியில் சுற்றுலா வழிகாட்டி. கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு வெளிநாட்டுக்காரர்கள் உட்பட ஐந்து சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்களை படகில் ஏற்றிக்கொண்டு லிடார் ஆற்றில் சென்றார், தர். அப்போது காற்று வேகமாக வீசியதால், படகு திடீரென்று கவிழ்ந்தது.

இதனால் படகில் இருந்தவர்கள் ஆற்றில் விழுந்தனர். உடனடியாக செயல்பட்டு, அவர்களை பத்திரமாகக் காப்பாற்றினார், தர். இந்நிலையில் திடீரென ஆற்றின் ஆழமாக பகுதியில் அவர் சிக்கிக்கொண்டார். அவர் பாதுகாப்பு கவசம் அணியாததால் அவரால் ஆழத்தில் இருந்து தப்பிக்க முடியவில்லை. தண்ணீரில் மூழ்கினார். 

இதையடுத்து பேரிடர் மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக வந்து தேடினர். வெள்ளிக் கிழமை இரவுவரை தேடியும் அவர் உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில் பவானி பாலத்தின் அருகே அவரது உடல் நேற்று கிடந்தது. அதை பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

தன் உயிரை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகளை காப்பற்றிய அவரது வீரத்தை சமூக வலைதளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அவரது துணிச்சலான செயலை பாராட்டியுள்ள காஷ்மீர் நிர்வாகம் அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கியுள்ளது.

‘’தன் உயிரை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய அகமது தரின் வீரத்துக்கு என் சல்யூட். அல்லா, அவருக்கு சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை அளிப்பார் என்று நம்புகிறேன்’’ என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com