ஏ.கே.47 துப்பாக்கியுடன் ஜம்மு காஷ்மீரின் பாஜக இளைஞரணியின் முன்னாள் துணைத் தலைவர் தனது படத்தை
‘டான் இஸ் டான்’ என்ற வாரிகளுடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் மாநில பாஜக இளைஞரணியின் முன்னாள் துணைத் தலைவராக இருந்தவர் ஆஷிஷ் சரீன். இவர்
இன்று சமூக வலைதளங்களில், ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் உள்ள புகைப்படத்தை ‘டான் இஸ் டான்’ என்ற
வரிகளுடன் பதிவிட்டிருந்தார். ஆஷிஷ்-ன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து,
ஆஷிஷ் அவரது சர்ச்சையான புகைப்படத்தை நீக்கினார்.
இதுகுறித்து பேசிய ஜம்மு காஷ்மீர் பாஜக இளைஞரணி தலைவர் சுரேஷ் மஹோத்ரா, ஆஷிஷ் தற்போது பாஜக
இளைஞரணியில் எந்தப் பதவியிலும் இல்லை. தற்போது இளைஞரணி துணைத் தலைவராக ரவீந்தர் ரெய்னா உள்ளார்
என்று கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் சாட் சர்மா, ஆஷிஷ் சரீன் குறித்து கூறும்போது, பாஜக அலுவலகத்திற்கு ஒரு
நாளைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் அனைவரையும் பாஜக தொண்டர்கள் என்று கூற
முடியாது. ஆஷீஸ் சரீன் என்ற பெயரில் ஒருவர் கூட பாஜகவில் இல்லை என்று கூறினார்.