ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையர்

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையர்
ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையர்
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறாது என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

17வது மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இந்தத் தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இறுதியாக 7ம் கட்ட தேர்தல் மே 19ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறுகிறது. 

இந்நிலையில், ஆந்திர பிரதேசம், அருணாச்சல், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களுக்கு மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இருப்பினும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறாது என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்கள் கருதி தேர்தல் நடத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக இணைந்து ஆட்சி அமைத்தது. முஃப்தி முகமது சையது, உடல் நலக் குறைவால் உயிரிழந்ததை அடுத்து அவரது மகள் மெஹபூபா முஃப்தி முதலமைச்சராக 2016, ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றார். பிடிபி, பாஜக இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. 

அதனையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்ததால், ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. மெஹபூபாவின் அரசும் கவிழ்ந்தது. பின்னர், யாரும் ஆட்சி அமைக்க முன்வராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆட்சி கலைக்கப்பட்ட 9 மாதங்கள் ஆன நிலையில், மக்களவை தேர்தலுடன் ஜம்மு-காஷ்மீருக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று கருதப்பட்டது. ஆனால், ஜம்மு-காஷ்மீருக்கு சட்டப்பேரவை கிடையாது என்று தேர்தல் ஆணையர் அறிவித்துவிட்டார். 

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 6 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அனந்த்நாக் தொகுதிக்கு மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்கான மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com