கல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

கல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
கல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
Published on

சாமியார் கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். கல்கி ப‌கவானும் அவரது மனைவி அம்மா பகவானும் ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருகின்றனர். அவர்களுக்கு ஏராளமான பக்தர்கள் உண்டு. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்திற்கு சொந்தமாக பள்ளிகள் உள்ளன. ஆந்திரா, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் உள்ளன.

கல்கி பகவான் ஆசிரமத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் நிதி வழங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும் கல்கி ஆசிரமத்திற்குச் சொந்தமாக பள்ளிகளும் உள்ளன. இந்த நிலையில் கல்கி ஆசிரமம் வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. அதன் பேரில் நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்திற்குச் சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள கல்கி பகவானின் மகன் கிருஷ்ணனின் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com