மார்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கான கட்டுமானப் பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக அரசு யார்கோல் எனும் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் முக்கிய துணை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே, 40 மீட்டர் உயரம், 414 மீட்டர் நீளத்தில் அணையை கட்டி முடித்துள்ளது. இந்த புதிய அணையால் கிருஷ்ணகிரியில் படேதலாவ் ஏரிக்கும், கே.ஆர்.பி.அணைக்கும் நீர்வரத்து குறையும். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. தவிர தென்பெண்ணை ஆற்றினால் பயனடையும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.