இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, 1975ஆம் ஆண்டு முதல் இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக, மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் 36 நாடுகளைச் சேர்ந்த 342 செயற்கைக்கோள்கள் அடங்கும் என்றும் அத்துறையின் அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வாக தாக்கல் செய்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 129 செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஃபாஸ்டேக் மூலம் எத்தனை கோடி ரூபாய் வசூல்? - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்