குறைந்த விலையிலான உயர்தர ஆக்சிஜன் செறிவூட்டிகளை தயாரித்த இஸ்ரோ

குறைந்த விலையிலான உயர்தர ஆக்சிஜன் செறிவூட்டிகளை தயாரித்த இஸ்ரோ
குறைந்த விலையிலான உயர்தர ஆக்சிஜன் செறிவூட்டிகளை தயாரித்த இஸ்ரோ
Published on

குறைந்த விலையிலான உயர்தர ஆக்சிஜன் செறிவூட்டிகளை இஸ்ரோ தயாரித்துள்ளது.

இந்தியாவில் நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்த ஆக்சிஜன் பற்றாக்குறை, ஆக்சிஜன் செறிவூட்டிகளின் தேவையை அதிகரித்து வருகிறது. அந்த தேவையை பூர்த்தி செய்ய, உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவி வருகிறது.

அப்படி இன்றைய தினம்கூட, சிங்கப்பூர் தூதரகம் சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம், முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. அது மட்டுமன்றி ரூ.18 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட அந்த நிவாரணப் பொருள்களை டி.வி.எஸ். குழுமத்தின் சார்பில் வழங்கியது சிங்கப்பூர் தூதரகம்.

இந்நிலையில், இஸ்ரோ நிறுவனம் நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கலை கருத்தில்கொண்டு, குறைந்த விலை ஆக்சிஜன் செறிவூட்டிகளை தயாரித்துள்ளது. செறிவூட்டிகள் மட்டுமன்றி, இஸ்ரோ குறைந்தசெலவில் 3 வகை வென்டிலேட்டர்களையும் வடிவமைத்துள்ளதாக கூறியுள்ளது.

இதுபற்றி திருவனந்தபுரத்திலுள்ள இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரின் இயக்குநர் சோம்நாத் அளித்திருக்கும் பேட்டியில்,

"சர்வதேச தரத்தில், ஆக்சிஜன், ஸ்வாஸ்தா என மூன்று வகையான வென்டிலேட்டர்களை நாங்கள் வடிவமைத்துள்ளோம். இந்தப் பெயர்கள் யாவும் வென்டிலேட்டர்களின் வடிவம், தன்மை மற்றும் பாகங்களை அடிப்படையாக வைத்து வைக்கப்பட்டுள்ளது. இவை மூன்றுமே, பயனாளர்களுக்கு ஏற்றவாறு, முழுமையான தானியங்கி திறன் கொண்டு செயல்படும் வகையிலும், தொடுதலின் மூலம் செயல்படுத்தும்படியும் மிக பாதுகாப்புடன் வடிவமைத்திருக்கிறோம்.

இவற்றை, ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இப்போது சந்தையில் இருக்கும் வென்டிலேட்டர்கள், 5 லட்சத்துக்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வென்டிலேட்டர் தவிர குறைந்த விலை ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் வடிவமைத்துள்ளோம். ஷ்வாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அவை, ஒரு நிமிடத்துக்கு 10 லிட்டர் வரை ஆக்சிஜன் வழங்கும் திறனுடன் இருக்கும். இது, ஒரே நேரத்தில் இரண்டு நோயாளிகள் பயனடைய உதவும் அளவுக்கானது. அடுத்த ஒரு மாதத்துக்குள் வர்த்தகரீதியாக இவற்றின் உற்பத்திகள் துவங்கும்" எனக் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 2020, கொரோனா முதல் அலையின் தொடக்கத்திலிருந்தே, இதற்கான கண்டுபிடிப்பு பணிகளை தொடங்கிவிட்டதாக, இவர்கள் தெரிவிக்கின்றனர்.

தகவல் உறுதுணை: Hindustan Times

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com