தங்கள் படைகளால் ஈரானில் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று தாக்குதல் நடத்த முடியும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்தில் புதிதாக இணைந்த அதிகாரிகள் முன்னிலையில் பேசிய அவர், “ஈரான் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு அளவற்ற சுதந்திரம் கிடைத்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கும், ராணுவத்திற்கும் ஈரானுக்கு அணு ஆயுதங்களை கிடைக்காத வகையில் செயல்பட முழு அதிகாரம் கொடுத்துள்ளது. அதுவே அவர்களின் உச்ச இலக்கு.” என்று குறிப்பிட்டார்.
இதனிடையே ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேலின் பாதுகாப்பு கட்டமைப்புகளை உளவு பார்த்ததாகக் கூறி இருவர் கைது செய்யப்பட்டு ராணுவத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.