அபிநந்தனுக்கு 40 மணி நேரம் சித்தரவதை : வெளியான தகவல்கள்

அபிநந்தனுக்கு 40 மணி நேரம் சித்தரவதை : வெளியான தகவல்கள்
அபிநந்தனுக்கு 40 மணி நேரம் சித்தரவதை : வெளியான தகவல்கள்
Published on

பாகிஸ்தான் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அபிநந்தனை 40 மணி நேரம் சித்தரவதை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து இந்திய விமானப்படை பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தது. இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் சில இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்த முயன்றன. 

அவற்றை இந்திய போர் விமானங்கள் விரட்டிச்சென்று தாக்கின. அப்போது எதிர்பாராத விதமாக இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். அவரை மரியாதையுடன் நடத்தியதாக தெரிவித்த பாகிஸ்தான், 58 மணி நேரத்தில் விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து இந்தியா வந்த அபிநந்தனிடம் பல கட்ட ராணுவ விசாரணைகள் நடத்தப்பட்டது. பின்னர் சில தினங்களில் அவர் மீண்டும் தனது பணியை தொடர்ந்தார். 

இந்நிலையில் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் இருந்த 58 மணி நேரத்தில் 40 மணி நேரம் சித்தரவதை செய்யப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அபிநந்தன் பாகிஸ்தானின் இஸ்லமாபாத்தில் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தபோது இந்த சித்ரவதை செய்யப்படவில்லை. ஆனால் அதன்பின்னர் அவர் ராவல்பிண்டிக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினரால் சித்தரவதை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

அவரை வெளிச்சம் அதிகமான, உடலை துன்புறுத்தல் விளக்குகள் கொண்ட அறையில் பூட்டி வைத்துள்ளனர். அத்துடன் காதுகளை பாதிக்கும், தலைவலியை உண்டாக்கும் சத்தத்தையும் அங்கு ஏற்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு அதிகாரி அபிநந்தனை அடித்து துன்புறுத்தியும், பல கேள்விகளை கேட்டும் துன்புறுத்தியும் உள்ளனர். இந்த சித்தரவதை 40 மணி நேரங்கள் தொடர்ந்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com