உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் - ஈஷா அறக்கட்டளை

உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் - ஈஷா அறக்கட்டளை
உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் - ஈஷா அறக்கட்டளை
Published on

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிதியுதவியை ஈஷா அறக்கட்டளை வழங்கியுள்ளது. 

கடந்த 14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு அந்ததந்த மாநில அரசுகள் நிதியுதவிகளை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் உயிரிழந்த இரண்டு வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சத்தை முதலமைச்சர் பழனிசாமி அளித்துள்ளார். அரசு மட்டுமின்றி பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளும் நிதியுதவி வழங்கி வருகின்றன.

அந்த வகையில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ஈஷா அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. அத்துடன் இந்திய ராணுவத்தின் பல்வேறு படைப் பிரிவுகளில் உள்ள ராணுவ வீரர்களுக்கு ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவால் சிறப்பு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த வீரர்கள் பற்றி பேசிய ஜக்கி, “நம்முடைய அனைத்து செயல்கள் மற்றும் சாதனைகளுக்கு, தைரியமிக்க நம் ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் சேவையே அடித்தளமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com