கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதற்கு, உருமாறிய கொரோனா வைரஸ்தான் காரணமா என உறுதிபடுத்தப்படவில்லை என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா மாநிலங்களில் N440K, E484K ஆகிய புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக, மத்திய அரசின் நிதி ஆயோக்கின் சுகாதாரப் பிரிவு உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் வகை கொரோனா பாதிப்பும் இந்தியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆனால், கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில், கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதற்கும், இந்த புதிய வைரஸ்களுக்கும் தொடர்பு இருப்பதாக அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று வி.கே.பால் தெரிவித்தார். மேலும், கொரோனா வைரசின் உருமாற்றங்களை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.