தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்டுள்ள கேள்விகள் உத்திரபிரதேச மாநில அதிகாரிகளை திக்குமுக்காட வைத்துள்ளது.
கடவுள் கிருஷ்ணரின் பிறப்பு சான்றிதழின் நகல் கேட்டு ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்துள்ளார். செப்டம்பர் 3ஆம் தேதி, நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், குறிப்பிட்ட தேதியில் தான் அவர் பிறந்தார் என்பதை உறுதிப்படுத்த அவரது பிறப்புச் சான்றிதழின் நகலை வழங்குமாறு சத்தீஸ்கரில் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யப்பட்டது. மேலும் கிருஷ்ணர் கடவுள் தான் என்பதை நிரூபிக்க ஆவணங்களும் அதில் கேட்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பத்தை கண்டு வாயடைத்து போயுள்ள அதிகாரிகள், மக்கள் நம்பிக்கை சம்பந்தப்பட்ட இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பது கடினம் என கூறியுள்ளனர்.