அதிமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று வெளியீடு?

அதிமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று வெளியீடு?
அதிமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று வெளியீடு?
Published on

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பட்டியல் இன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல்களை எதிர்கொள்ள திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிவுற்று எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதையும் வெளியிட்டுள்ளனர்.

இதேபோல், அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமகவுக்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகளும், பாரதிய ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மேலும் புதிய தமிழகம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்குவது குறித்த பேச்சுவார்த்தை அனைத்து கட்சிகளுடனும் சுமூகமாக முடிவுற்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் மட்டும் நீடித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பாரதிய ஜனதாவுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதால், எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே பெரம்பலூர், ஆண்டிப்பட்டி உள்பட 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் நடைபெறுகிறது. இதில் திருவாரூர் தொகுதி தவிர 17 தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் விருப்பமனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் அளித்தவர்களிடம் வரும் ஞாயிற்றுகிழமை நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com