வரும் டிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி சாத்தியமா?

வரும் டிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி சாத்தியமா?
வரும் டிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி சாத்தியமா?
Published on

இந்தியாவில் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. இதனை உச்சநீதிமன்றத்தில் உறுதிப்பட தெரிவித்துள்ளது அரசு. இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் முடிய இன்னும் 

நாட்கள் உள்ளது. இந்நிலையில் அதற்குள் அனைவருக்கும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவது சாத்தியமா என்பது குறித்து அலசுவோம். 

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 அன்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இன்று 137-வது நாளை இந்தியா எட்டியுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் 21,85,46,667 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 4,51,35,171 பேர் இரண்டாவது டோஸை பெற்றுள்ளனர். 

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேவைப்படும் தடுப்பூசி டோஸ்கள் மொத்தம் 173 கோடி. அதில் 21.85 கோடி டோஸ்கள் மட்டுமே தற்போது செலுத்தப்பட்டுள்ளது. 17.34 கோடி பேர்தான் முதல் டோஸ் பெற்றுள்ளனர். அந்த வகையில் பார்த்தால் 151.15 கோடி டோஸ் தடுப்பூசி தேவை உள்ளது.

தற்போது இந்தியாவில் தடுப்பவசி செலுத்தப்பட்டு வரும் நாள் ஒன்றுக்கான சராசரி 16 லட்சம் என்ற நிலையில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 23.97 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நாள் ஒன்றுக்கு 70 லட்சம் டோஸ் வரையில் தடுப்பூசி போட வேண்டி உள்ளது. அதை செய்தால் தான் இது சாத்தியமாகும். இதை செய்ய தடுப்பூசிகளை அதிகளவில் தயாரிக்க வேண்டியுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com