ஐநாவின் ஐஎஸ் மற்றும் அல் கொய்தா தீவிரவாதம் பற்றிய அறிக்கையில், இந்திய மாநிலங்களில் அவர்கள் அதிகம் பரவியுள்ளதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மியான்மர் நாடுகளைச் சேர்ந்த 150 முதல் 200 வரையிலான உறுப்பினர்கள் பெரும் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐஎஸ், அல்கொய்தா மற்றும் அந்த தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய தனிநபர்கள் பற்றிய ஐநாவின் 26வது அறிக்கையில், இந்தியாவில் இயங்கும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய விலாயா ஹிந்த்தின் அறிவிப்பை மேற்கோள் காட்டி, கேரளா மற்றும் கர்நாடகாவில் குறிப்பிடத்தக்க அளவு ஐஎஸ் தீவிரவாதிகள் செயல்படுவதாக சுட்டிக்காட்டுப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் சர்வதேசப் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில், தீவிரவாதச் செயல்பாடுகளை திட்டமிடுதல் தடைபட்டுள்ளதாகவும், அதனால் சர்வதேச தாக்குதல் நடத்தக்கூடிய இலக்குகள் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது.