கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி கிடைக்காது என்று வெளியான தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பல்வேறு நாடுகள் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத் தயாரிப்பான கோவாக்சினை இன்னும் அங்கீகரிக்காததால், அதை செலுத்திக் கொண்டவர்களுக்கு வெளிநாட்டுப் பயண அனுமதி கிடைக்காது என தகவல் வெளியானது. இது முற்றிலும் தவறானது, அடிப்படையற்றது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனாவுக்கு எதிரான மிகச்சிறந்த தடுப்பூசிகளில் ஒன்றாக கோவாக்சின் உள்ளதாக கூறிய அவர், அதை செலுத்திக் கொண்டவர்களுக்கு வெளிநாடு பயண அனுமதியில்லை என எந்த முடிவையும் உலக சுகாதார அமைப்பு எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.