தென்னிந்தியாவில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆக்டிவாக இயங்கி வருவதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) மேற்கொண்ட புலன் விசாரணையின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக சொல்லியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பிகார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஐ.எஸ் அமைப்போடு தொடர்பிலிருந்த தென் மாநிலங்களை சேர்ந்த சுமார் 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.