பார்வை சவாலுடைய மாற்றுத்திறனாளிகள் துணையின்றி சாலையில் நடந்து செல்ல உதவும் புதிய சாதனத்தை பிரான்ஸைச் சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. பொதுவாக பார்வை சவால் உடைய மாற்றுத்திறனாளிகள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, கைத்தடியை எடுத்துச் செல்வது வழக்கம்.
இப்போது அந்த கைத்தடி அவசியம் இல்லை. அவர்கள் தங்கள் தோள்பட்டையில் பொருத்திக் கொள்வது போன்ற ஒரு சாதனம் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் உள்ள 3டி கேமரா மூலம் சாலையில் உள்ள தடைகளும் தடுப்புகளும் கண்டறியப்பட்டு, ஹெட்ஃபோன் மூலம் வழிகாட்டப்படும்.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/VxILn8JZFTo?controls=0&start=63" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
இனி இந்த சாதனத்தை அணிந்து கொள்ளும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு கைத்தடியின் உதவிகூட தேவையில்லை. மற்ற பாதசாரிகளைப்போலவே இயல்பாக சாலைகளில் நடந்து செல்ல முடியும்.