பட்டாசு வெடிப்பது தொடர்பாக விரைவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்: உச்ச நீதிமன்றம்

பட்டாசு வெடிப்பது தொடர்பாக விரைவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்: உச்ச நீதிமன்றம்
பட்டாசு வெடிப்பது தொடர்பாக விரைவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்: உச்ச நீதிமன்றம்
Published on

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது தொடர்பான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க மற்றும் தயாரிக்க விற்பனை செய்ய தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு மாற்றாக தற்போது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தளர்வுகளை நீக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் அனைத்தின் மீதான விசாரணையும், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, விரைவில் இருதரப்பில் யாரேனும் ஒருவருக்கு சாதகமாக இதுதொடர்பான ஏதேனுமொரு இடைக்கால உத்தரவு நிச்சயம் பிறப்பிக்கப்படும் என கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். இருப்பினும் அந்த இடைக்கால உத்தரவு எப்போது பிறப்பிக்கப்படும் என்பதும், யாருக்கு சாதகமாக அது பிறப்பிக்கப்படும் என்பதும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விசாரணையின்போது நீதிபதிகள் தரப்பில், “பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்படவே இல்லை. பட்டாசு தயாரிப்பவர்கள் கடுமையான விதிமுறை மீறல்களில் ஈடுபடுகிறீர்கள். நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராகவும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வில்லை. மாறாக கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்களின் பொது சுகாதாரத்திற்கு ஆபத்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால்தான் பட்டாசுக்கு தடை விதிக்கிறோம்” என நீதிபதிகள் கூறினர்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் எத்தகைய இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப் போகிறது என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com