நெடுஞ்சாலையின் நடுவில் காரை நிறுத்தி இன்ஸ்டா ரீல் - இளம்பெண்ணுக்கு ரூ.17,000 அபராதம்!

நெடுஞ்சாலையின் நடுவில் காரை நிறுத்தி இன்ஸ்டா ரீல் - இளம்பெண்ணுக்கு ரூ.17,000 அபராதம்!
நெடுஞ்சாலையின் நடுவில் காரை நிறுத்தி இன்ஸ்டா ரீல் - இளம்பெண்ணுக்கு ரூ.17,000 அபராதம்!
Published on

இன்ஸ்டாகிராம் சமூகவலைதளப் பக்கத்தில் பிரபலமாக இருந்துவரும் இளம்பெண் ஒருவருக்கு, சாலை விதிகளை மீறியதாக ரூ. 17,000 அபராதம் விதித்துள்ளது உத்தரப்பிரதேச மாநில காவல்துறை.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூகவலைதளங்கள் பெருகியுள்ள இந்தக் காலத்தில், அதில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் பிரபலங்களாக இருந்தாலும், இல்லையென்றாலும் ரீல்ஸ் செய்து, அதாவது குறுகிய வீடியோக்களை செய்து வெளியிடுவது வழக்கமான ஒன்றாகியுள்ளது. சமூகவலைதளங்களில் அதிகமான ஃபாலோயர்ஸ்களைப் பெற (பின்தொடர்பவர்களைப் பெற), பலர் இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பதிவுசெய்து வீடியோ வெளியிடுவதைக் காணலாம். ஆனால் இந்தச் செயல்கள் சில சமயங்களில் பார்ப்பவர்களை மட்டும் இல்லை, அதனை செய்யும் இன்ஃப்ளூயன்சர்களையும் சிக்கலில் தள்ளும்.

அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணான வைஷாலி சௌத்ரி என்பவர் தேசிய நெடுஞ்சாலையில், காரை நிறுத்தி இன்ஸ்டாகிராம் ரீல் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில், சிலர் விமர்சனங்களையும் முன்வைத்தனர். பரபரப்பான போக்குவரத்து மிகுந்த அந்த தேசிய நெடுஞ்சாலையில் இன்ஸ்டா ரீல்ஸ்க்காக காரை நிறுத்தியது, தவறான செயல் என்று சிலர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வீடியோ வைரலானதை அடுத்து காசியாபாத் காவல்துறை சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. சாலையின் பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக, வைஷாலி சௌத்ரிக்கு ரூ.17,000 அபராதம் விதித்து அதற்கான ரசீது அனுப்பப்பட்டுள்ளதையும் போலீசார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். தானா ஷாகிபாபாத் பகுதியில் நடந்த இந்த சம்பவத்துக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் 6,52,000 ஃபாலோயர்களை வைத்துள்ள வைஷாலி சௌத்ரி, சாலைகளில் நின்று ரீல்ஸ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். புல்லட் பைக்கில், மணப்பெண் போன்ற ஒருவர் கனமான லெஹங்கா மற்றும் அணிகலன்கள் அணிந்துக்கொண்டு செல்வது போல், இவர் ஏற்கனவே பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com