உலகின் மிகப்பழமையான போர்க்கப்பல் ஓய்வு பெற்றது

உலகின் மிகப்பழமையான போர்க்கப்பல் ஓய்வு பெற்றது
உலகின் மிகப்பழமையான போர்க்கப்பல் ஓய்வு பெற்றது
Published on

இந்தியாவிற்கு 30 வருடங்கள் ஆண்டுகள் சேவை செய்த பிறகு, உலகின் மிக வயதான விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட் இன்று ஓய்வு பெற்றது.

ஐஎன்எஸ் விராட் 1943-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்தினால் உருவாக்கப்பட்டது. 20 ஆண்டுகள் பிரிட்டிஷ் கடற்படைக்காகப் பணியாற்றிய பிறகு, மே

12, 1987 இந்திய கடற்படைக்கு அற்பணிக்கப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாவது விமானம் தாங்கிய கப்பல்.

விராட் உலகின் மிகச் சிறந்த விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 22700 டன் எடை கொண்ட இந்த கப்பல் 227 மீட்டர் நீளமும், 49 மீட்டர் அகலமும் கொண்டது.

ஐஎன்எஸ் விராட் உலகின் மிக பழமையான போர்க்கப்பல் என கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. ஐஎன்எஸ் விராடை நிலம் மற்றும் கடலில் பயன்படுத்த

முடியும். இந்த கப்பல் பிரிட்டனில் இருந்த போது எச்எம்எஸ் ஹெர்ம்ஸ் என அழைக்கப்பட்டது. இந்திய கடற்படையில், விராடை ‘தாய்’ என்று அழைத்தனர். மேலும், இக்கப்பல் ‘தி கிராண்ட் ஒல்ட் லேடி’ எனவும் அழைக்கப்பட்டது.

விராட் முழுமையாக செயல்பாட்டில் இருந்த போது, 1,500 பேரடங்கிய குழு இந்த விமானத்தில் பணியாற்றினர். இறுதிப் பயணத்திற்குப் பிறகு, இந்தக் குழு 300 பேராக குறைக்கப்பட்டது. இக்கப்பல் கடலில் 2,250 க்கும் மேற்பட்ட நாட்கள் இருந்துள்ளது. அதில் 10.94 லட்சம் கி.மீ. பயணித்தது. உலகத்தை 27 முறை சுற்றி வந்துள்ளது. ஐஎன்எஸ் விராட் 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது ஆபரேஷன் விஜயிலும் 1989-ம் ஆண்டு ஆபரேஷன் ஜுபிட்டரிலும் பயன்படுத்தப்பட்டது.

ஜூன் மாதம் 23-ம் தேதி ஐஎன்எஸ் விராட் மும்பையில் இருந்து கொச்சிக்கு அதன் இறுதி பயணத்தை மேற்கொண்டது. இன்று மாலை நடைபெற்ற விராடின் பிரிவு உபசார

விழாவில், இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் கப்பலிலுள்ள இந்தியக் கொடி இறக்கப்பட்டது.

இந்த கப்பல் சொகுசு உணவகமாகவோ, கடல் அருங்காட்சியகமாகவோ மாற்றப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com