சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தி இன்னிசை கச்சேரிகள் மீண்டும் துவங்கியுள்ளன. பக்தர்கள் கச்சேரியை ஆர்வத்துடன் கண்டும் கேட்டும் ரசித்து மகிழ்ந்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கட்டட்டுள்ளது. முழு தளர்வுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களை மகிழ்விக்கவும் அவர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தவும் தினசரி பக்தி இன்னிசை கச்சேரிகள் நடப்பது வழக்கம். இந்நிலையில், கொரோனா முடக்கத்திற்குப் பின் சபரிமலை சன்னிதான அரங்கில் மாலை நேரங்களில் பக்தி இன்னிசை கச்சேரிகள் மீண்டும் துவங்கியுள்ளன.
இதையடுத்து முதற்கட்டமாக சபரிமலை பணியில் இருக்கும் வருவாய் மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் இன்னிசைக் கச்சேரிகளை கண்டும் கேட்டும் ரசித்து மகிழ்ந்தனர்.