நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 33வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. இவர் 1984 ஆம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இவரின் மறைவு உலக தலைவர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இந்திராவின் உருவ படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். டெல்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தியின் சமாதியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். அதே போல் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ”இந்தியாவின் பெண் பிரதமர் இந்திரா காந்திக்கு நினைவு அஞ்சலி” என்று பதிவிட்டுள்ளார்.