’விமானத்தில் வெடிகுண்டு’: பெண் பயணி புகாரால் பரபரப்பு

’விமானத்தில் வெடிகுண்டு’: பெண் பயணி புகாரால் பரபரப்பு
’விமானத்தில் வெடிகுண்டு’: பெண் பயணி புகாரால் பரபரப்பு
Published on

இண்டிகோ விமாத்தில் வெடிகுண்டு இருப்பதாக, கோ ஏர் விமானத்தில் செல்ல வேண்டிய பெண் பயணி கொடுத்த புகாரல் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

மும்பையில் இருந்து லக்னோ வழியாக டெல்லிக்கு 6E 3612 என்ற விமானம் காலை 6.05 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல இன்று காலையும் மும்பை விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் புறப்பட்டது. அப்போது கோ ஏர் விமானத்தில் செல்ல வேண்டிய பெண் பயணி ஒருவர், இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக, இண்டிகோ விமான கவுன்டரில் சென்று பரபரப்புடன் தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த இண்டிகோ ஊழியர்கள், விமானத்தை உடனடியாகத் தரையிறக்குமாறு கூறினர். இறங்கிய விமானத்தைத் தனி இடத்துக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதுபற்றி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது.

புகார் கொடுத்த பெண் பயணியை போலீசார் விசாரித்தனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல காணப்படுவதாக போலீசார் தெரிவித்துள் ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com