தினம்தோறும் 19,000 முறை அமேசான் அலெக்ஸாவிடம் ‘ஐ லவ் யூ’ சொன்ன இந்தியர்கள்!

தினம்தோறும் 19,000 முறை அமேசான் அலெக்ஸாவிடம் ‘ஐ லவ் யூ’ சொன்ன இந்தியர்கள்!
தினம்தோறும் 19,000 முறை அமேசான் அலெக்ஸாவிடம் ‘ஐ லவ் யூ’ சொன்ன இந்தியர்கள்!
Published on

இன்றைய ஸ்மார்ட்டான உலகத்திற்கு உகந்த வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் உதவி வருகிறது வாய்ஸ் அசிஸ்டென்ட் கேட்ஜெட்களான ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள். ஆப்பிள், கூகுள், அமேசான் என பல முன்னணி டெக் நிறுவனங்கள் இந்த ஸ்பீக்கர்களை போட்டா போட்டி போட்டு விற்பனை செய்து வருகின்றனர். இணையத்துடன்  இணைக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்பீக்கர்களிடம் அதன் பயனர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் வரும். 

விரும்பிய பாடலை கேட்கவும், கதைகளை கேட்கவும், விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் சொல்வதும்தான் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் பணி. அதிலும் இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் அலெக்ஸாவுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. அதன் காரணமாக தான் உலக மொழிகளோடு தமிழ், ஹிந்தி, கன்னடா, தெலுங்கு, மலையாளம், மராத்தி, குஜராத்தி என சகல மொழிகளிலும் அலெக்ஸா பேசி அசத்துகிறது. 

அலெக்ஸா இந்தியாவில் மூன்று வயதை எட்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டை காட்டிலும் 2020இல் இந்தியர்கள் அலெக்ஸாவுடன் பேசுவது 67 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கடந்த 2020இல் தினம்தோறும் 19000 முறை அமேசான் அலெக்ஸாவிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லியுள்ளனர் இந்தியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுளள்து.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com