"இந்தியர்கள் இந்தாண்டு மகிழ்ச்சியாக இல்லை" ஐநாவின் அறிக்கையில் தகவல்

"இந்தியர்கள் இந்தாண்டு மகிழ்ச்சியாக இல்லை" ஐநாவின் அறிக்கையில் தகவல்
"இந்தியர்கள் இந்தாண்டு மகிழ்ச்சியாக இல்லை" ஐநாவின் அறிக்கையில் தகவல்
Published on

கடந்த ஆண்டைவிட இந்தாண்டு இந்திய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று  ஐநாவின் World happiness report தெரிவித்துள்ளது.

‘உலக மகிழ்ச்சி தினம்’  உலகம் முழுவதும் மார்ச் 20ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு நேற்று மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. இத் தினத்தில் ஐநா  World happiness report  2019 வெளியிட்டது.  ஐநா World happiness report ஐ 2012 ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கை உலக மக்களின் மகிழ்ச்சியை சமத்துவமின்மை, வருமானம், சுதந்திரம், அரசின் மீதுள்ள நம்பிக்கை, மக்களின் ஆயுட்காலம் மற்றும் சமூக ஆதரவு ஆகிய காரணிகளை கொண்டு கணக்கிடுகிறது. 

இந்தாண்டு அறிக்கையில் சில தகவலகளை தெரிந்துகொள்ளலாம். இந்தியா கடந்த ஆண்டு இருந்த இடத்திலிருந்து 7 இடங்கள் சரிந்து 140வது இடம் பெற்றுள்ளது. இவ்வறிக்கையில் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 67 இடத்திலும், சீனா 93வது இடத்திலும், வங்கதேசம் 125வது இடத்திலும் உள்ளன. உலகளவில் மகிழ்ச்சி குறைந்த நாடாக தெற்கு சூடான் நாடு உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்த அறிக்கையில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அதிகம் வாக்களிக்க வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மக்கள் கடந்த ஆண்டைவிட இந்தாண்டில் மகிழ்ச்சியாக இல்லை என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மக்களின் மகிழ்ச்சி குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. ஏற்கெனவே இந்தப் பட்டியலில் ஏமன், சிரியா, போட்ஸ்வானா, வெனிசுலா ஆகிய நாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com