தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஆண்கள் மற்றும் பெண்களின் சராசரி எடை, உயரத்தை அதிகரித்து புதிய கணக்கீட்டை வெளியிட்டுள்ளது.
தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் கணக்கீட்டின்படி 2010 ஆம் ஆண்டு ஆண்களின் சராசரி எடை 60 கிலோவாக இருந்தது. தற்போது அது 65 ஆக உயர்ந்துள்ளது. பெண்களுக்கு 50 கிலோவாக இருந்த சராசரி எடை 55 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 2010 ஆம் ஆண்டு ஆண்களின் சராசரி உயரம் 5.6 அடி மற்றும் பெண்ணின் உயரம் 5 அடி.
இது தற்போது ஆண்களுக்கு 5.8 அடியாகவும் பெண்களுக்கு 5.3 அடி ஆகவும் உயர்ந்துள்ளது. ஊட்டச்சத்து உணவை உட்கொள்ளுதல் அதிகமானதால் இந்த சராசரி எடையும், உயரமும் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இளம் பருவத்திற்கான ஆண், பெண் வயது 19லிருந்து 20 ஆக கூட்டப்பட்டுள்ளது. இதேபோல் நாம் தினசரி உண்ணக்கூடிய ஊட்டச்சத்துகளின் அளவும் உயர்த்தப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 40கிராம் கொழுப்பு, 100 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 130 கிராம் வரை பிற உணவு உட்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரம் மில்லி கிராம் கால்சியமும், 5 கிராம் வரை சோடியம் உட்கொள்ளலாம் என்றும் ஐசிஎம்ஆர் நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது.