கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. மும்பைப் பங்குச்சந்தை இன்று பிற்பகல் 1 மணியளவில் சென்செக்ஸ் 1,732 புள்ளிகள் சரிந்து 47,858 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 518 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,316 புள்ளிகளில் வர்த்தகமானது.
இன்றைய வர்த்தகத்தில் ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் அச்சத்துடன் பங்குகளில் இருந்து வெளியேறி வருவதே சந்தைகள் சரியக் காரணமாகக் கூறப்படுகிறது.