ஆயிரக்கணக்கான இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஃபின்டெக் உலகில் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றன - பிரதமர் பேச்சு
பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோர் இணைந்து நிகழ் நேர கட்டண முறை இணைப்புகளை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தனர். ”சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள், இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் , மாணவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் வாழ் மக்கள் ஆகியோர் உடனடியாக குறைந்த செலவில் பண பரிமாற்றம் செய்வதற்கு உதவியாக இந்த இணைப்புகள் தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணொளி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கு பெற்ற இந்திய பிரதமர் மோடி பேசுகையில் , ”இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நட்பு மிகவும் பழமையானது. இந்தியா-சிங்கப்பூர் உறவில் இது ஒரு புதிய மைல்கல் தொழில்நுட்பம் மற்றும் ஃபின்டெக் இன்று உலகை இணைக்கிறது. இன்றைய அறிமுகமானது எல்லை தாண்டிய ஃபின்டெக் இணைப்பின் புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளது இந்த முன்முயற்சி இரு நாட்டு மக்களும் தங்கள் மொபைலில் இருந்து உடனடியாகவும் குறைந்த விலையிலும் நிதியை மாற்ற உதவும். இந்த வசதி இரு நாடுகளுக்கும் இடையே மலிவான மற்றும் நிகழ்நேரத்தில் பணம் அனுப்பும் விருப்பத்தை செயல்படுத்தும். நம் டிஜிட்டல் இந்தியா திட்டம் எளிதாக வாழ்வது மற்றும் எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்தியுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு கோவிட் தொற்றுநோய்களின் போது பயனுள்ளதாக இருந்தது. ஃபின்டெக் துறையில் இந்தியாவின் வெற்றிக்கு நமது தொழில்நுட்ப ஆர்வமுள்ள இளைஞர்கள் தலைமை தாங்குகிறார்கள். இன்று ஆயிரக்கணக்கான இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஃபின்டெக் உலகில் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றன,” என்று தெரிவித்தார்.