கல்ரா மற்றும் ஆசிஷ் மோகபத்ரா தம்பதியரின் 2வது ஸ்டார்ட்-அப் நிறுவனமான Oxyzo Financial Services முதல் சுற்றிலேயே 200 மில்லியன் டாலர் நிதியை திரட்டி சாதனை படைத்து யுனிகார்ன் கிளப்பில் நுழைந்துள்ளது.
கல்ரா, லாபகரமான ஃபின்டெக் யூனிகார்னின் இந்திய பெண் நிறுவனர்களில் ஒருவர். மேலும் இவரது கணவர் ஆசிஷ் மோகபத்ராவுடன் இணைந்து இரண்டு யூனிகார்ன்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். ஏற்கெனவே ஆஃப் பிசினஸ் (OfBusiness) எனும் கடன் வழங்கும் தளத்தை துவங்கினர். உற்பத்தி மற்றும் துணை ஒப்பந்தம் போன்ற துறைகளில் சிறு, குறு நிறுவனங்களுக்கு புதிய பொருட்களை வாங்குவதற்கு, பணப்புழக்கம் மற்றும் செயல்பாட்டு மூலதன நிதியுதவியை இந்நிறுவனம் வழங்குகிறது. தற்போது இது $350 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களைக் கொண்டுள்ளது. தொடக்கத்தில் இருந்து லாபம் ஈட்டி வருகிறது. இந்த தம்பதியரின் அடுத்த ஸ்டார்ட்-அப் நிறுவனம்தான் Oxyzo Financial Services.
Oxyzo ஃபைனான்சியல் சர்வீசஸ் மார்ச் 23 அன்று, சீரிஸ் A இல் $1 பில்லியன் மதிப்பீட்டில் நிதித் திரட்டலை துவங்கியது. முதல் சுற்றிலேயே $200 மில்லியனைத் திரட்டியுள்ளதாகக் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு இந்திய ஸ்டார்ட்அப் மூலம் முதல் சுற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய நிதி திரட்டலாக அமைந்தது.
இந்த நிதியானது Oxyzo இன் பரந்த டிஜிட்டல் நிதிச் சேவைகளை இயல்பாகவும், இயற்கையாகவும் விரிவுபடுத்தவும், விநியோகச் சங்கிலி சந்தையை அளவிடவும், சிறு குறு நிறுவனங்களுக்கான புதுமையான நிலையான-வருமான தயாரிப்புகளைத் தொடங்கவும் மற்றும் கடன் மூலதனச் சந்தைகள் மற்றும் பத்திரங்கள் உட்பட பிற கட்டண வருமான வணிக வரிகளை அளவிடவும் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.