நாசாவின் `ஆர்டிமெஸ்` நிலவு பயண திட்டத்தில் - இந்திய விஞ்ஞானி அமித் பாண்டே

நாசாவின் `ஆர்டிமெஸ்` நிலவு பயண திட்டத்தில் - இந்திய விஞ்ஞானி அமித் பாண்டே
நாசாவின் `ஆர்டிமெஸ்` நிலவு பயண திட்டத்தில் - இந்திய விஞ்ஞானி அமித் பாண்டே
Published on

நாசாவின் நிலவு பயண திட்டத்தின் மூத்த விஞ்ஞானியாக இந்தியாவைச் சேர்ந்த அமித் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது 'அப்போலோ' திட்டம் மூலம் நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு 'ஆர்டெமிஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்தின் மூத்த விஞ்ஞானியாக இந்தியாவைச் சேர்ந்த அமித் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி நகரில் பிறந்த அமித் பாண்டே, பல ஆண்டுகளாக அமெரிக்காவில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகளை இலவசமாக வழங்கி வருகிறார்.

ஆர்டெமிஸ் திட்டம் 1, இந்த மாதம் இறுதியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com