ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மக்களவையில், ரயில்வேதுறையின் அடுத்த 10 ஆண்டுகால திட்டம் பற்றி விளக்கிய அவர், ரயிலில் ஓராண்டுக்கு 800 கோடி பேர் பயணிக்கும் நிலையில், இதனை ஆயிரம் கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். சரக்கு பரிவர்த்தனைகளும் இரு மடங்காக உயர்த்தப்பட்டு, அதில் மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
சமூக கடமையுடன் கூடிய மிக முக்கியமான துறை என்பதால், ரயில்வே துறை தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்றும் உறுதிபட தெரிவித்தார்.