பயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி உணவு

பயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி உணவு
பயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி உணவு
Published on

நவராத்திரி விழாவை முன்னிட்டு பயணிகளுக்கு சிறப்பு விரத உணவுகளை இந்திய ரயில்வே நிர்வாகம் வழங்குகிறது.

இந்துகளின் திருவிழாவான நவராத்திரி வடமாநிலங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.  நவராத்திரி விழா வீட்டில் கொலு வைத்து ஓன்பது நாளும் ஒவ்வொரு விதமான நவராத்திரி விரதம் கடைபிடித்து கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் வேவ்வேறு விதமான பிரசாதங்கள் வழங்கப்படுவதும் வழக்கம். அந்த வகையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ரயில் பயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி விரத உணவை இந்திய ரயில்வே நிர்வாகம் வழங்குகிறது.

நாக்பூர், ஜெய்ப்பூர், நாசிக், நிஜாமுதீன், லக்னோ உள்ளிட்ட 11 ரயில் நிலையங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. ஜவ்வரிசி கிச்சடி, லஸ்ஸி, பழ சாலட் ஆகியவை விரதகால உணவாக பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. பயணிகள் தங்களின் பயணச்சீட்டு எண்ணை குறிப்பிட்டு FOOD ON TRACK செயலி மூலமாகவும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com