கனடாவில் வால்மார்ட்டில் உள்ள வாக் - இன் ஓவனுக்குள் 19 வயது இந்திய வம்சாளியை சேர்ந்த இளம்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
ஹாலிஃபாக்ஸ் நகரில் உள்ள வால்மார்ட் ஸ்டோரில் கடந்த 19 ஆம் தேதி இரவு 9.30 மணி அளவில் 19 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்த குர்சிம்ரன் கவுர் எரிந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குர்சிம்ரனின் தாயும் தனது மகளோடு அதே இடத்தில்தான் பணிபுரிந்து வருகிறார். சம்பவதினத்தன்று, குர்சிம்ரனை வெகு நேரமாக காணவில்லை என்று குர்சிம்ரனின் தாய் தேடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, ஓவனிலிருந்து ஏதோ ஒன்று லீக் ஆவதை அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் கண்டுள்ளனர்.
அப்போது, அதை திறந்து பார்க்கும்போது, குர்சிம்ரனின் உடல் எரிந்த நிலையில், உள்ளே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, போலீசாருக்கு தகவலளித்தநிலையில், விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். ஆனால், குர்சிம்ரன் எப்படி ஓவனில் சிக்கினார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில், இந்த சம்பத்திற்கான காரணத்தை விரைவாக கண்டறிய வேண்டும் என்று, மரிட்டைம் சீக்கிய சமூக அமைப்பினர் மற்றும் பொதுமக்களும் இணைந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்தநிலையில், வால்மார்ட்டில் பணிபுரிந்த பலர் தங்களது டிக் டாக் கணக்குகளின் மூலமாக இது தொடர்பான பல சந்தேகங்களை முன்வைத்து வருகின்றனர்.
அதில், வாக் - இன் ஓவன் யாராவது உங்களை உள்ளே தள்ளப்பட்டால் தான் உங்களால் உள்ளே சிக்கிக்கொள்ள முடியுமே தவிர, மற்றபடி, உள்ளே சிக்க வழியே இல்லை என்று தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம், இவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து, டிக்டாக் பயனரான கிறிஸ் ப்ரிஸி தெரிவிக்கையில், ”நான் இந்த ஓவனுக்கு பொருத்தமாக இருப்பேனா என்று கூட எனக்குத் தெரியவில்லை. நான் 5 அடி 1,நான் உள்ளே செல்ல குனிந்து நிற்க வேண்டும்.
அதுமட்டுமல்ல, ஓவனின் கதவை மூடுவதற்கு, உங்களது முழு பலத்துடன் தாழ்ப்பாளை தள்ளி பூட்டினால் மட்டுமே அதை மூட முடியும்.. என்னாலே என்னை பூட்டிக்கொள்ள முடியாது. அப்படியே பூட்ட வேண்டுமெனில், என்னை யாராவது உள்ளே தள்ளி வெளியிலிருந்து பூட்டினால் மட்டுமே முடியும். ” என்று தெரிவித்துள்ளார்..
மேலும், வால்மார்ட்டின் பணிபுரிந்த மற்றொரு பணியாளர், “நான் எதையும் விபரீதமாக கூற முயற்சிக்கவில்லை.. வால் - மார்ட் பேக்கரி ஓவனை பொறுத்தவரை பயன்படுத்த மிகவும் பாதுகாப்பான ஒன்று..” என்று தெரிவித்துள்ளார்.