அரசு நிதியில் முறைகேடு?: இந்திய தூதரை உடனே நாடு திரும்ப உத்தரவு

அரசு நிதியில் முறைகேடு?: இந்திய தூதரை உடனே நாடு திரும்ப உத்தரவு
அரசு நிதியில் முறைகேடு?: இந்திய தூதரை உடனே நாடு திரும்ப உத்தரவு
Published on


ஆஸ்திரியாவுக்கான இந்திய தூதரை உடனடியாக நாடு திரும்புமாறு இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

1988-ஆம் ஆண்டு பேட்ச் ஐஎஃப்எஸ் அதிகாரி ரேணு பால். தற்போது ஆஸ்திரியாவிற்கான இந்திய தூதராக இருக்கும் அவரின் பதவிக் காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இவர் அரசாங்கத்தின் நிதியை தவறான முறையில் பயன்படுத்தி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக விசாரிக்க மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்தியது. அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் அதிக பணத்தை பயன்படுத்தி நிதி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் தான் தங்கிய வீட்டின் வாடகைக்காக மாதம் இந்திய மதிப்பில் ரூ.15 லட்சம் செலவழித்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ரேணு பாலின் தூதருக்கான அனைத்து அதிகாரங்களும் நிறுத்தி வைக்கப்படுவதோடு, உடனடினயாக நாடு திரும்பவவும் வெளிவிவகாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com