இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழந்தை பாகிஸ்தானின் டிரோன் விமானத்தை, இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் இன்று காலை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. பாகிஸ்தான் எல்லையையொட்டிய பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை பொழிந்தது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஜ்புல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று அதிகாலை மூன்று மணியளவில் நடந்த இந்த தாக்குதல் 21 நிமிடங்கள் நீடித்தது. இதில் பல பயங்கரவாதிகளும் பயங்கரவாத தலைவர்களும் கொல்லப்பட்டதாகவும் அவர்களின் கட்டுப்பாட்டு அறைகள் முற்றிலும் அழிந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குஜராத் பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் ட்ரோன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் அருகே, இந்த ஆளில்லா விமானம் நுழைந்ததுள்ளது. இந்திய எல்லையில் பாதுகாப்பை உளவு பார்ப்பதற்காக இது அனுப்பப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதைக் கண்ட இந்திய ராணுவத்தினர் அதை சுட்டு வீழ்த்தினர்.
எல்லைப் பகுதியான கட்ச் அருகே, பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.