சீனாவை ஒட்டிய எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் அதிநவீன கூடாரங்களை நிறுவி வருகின்றனர். மைனஸ் 40 டிகிரி கடுங்குளிரிலும், பலத்த மழை உள்ளிட்ட கால நிலைகளிலும் 8 பேர் முதல் 40 பேர் வரை தங்கக் கூடியதாக இந்த கூடாரங்கள் உள்ளன.
பலகைகளால் உருவாக்கப்படும் இக்கூடாரங்களை பிரித்தெடுத்து தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும். சீன எல்லையை ஒட்டியுள்ள கல்வான் பகுதியில் கடந்தாண்டு இரு தரப்பு படைகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இது எல்லைப்பகுதியில் பதற்ற நிலையை ஏற்படுத்திய நிலையில் அங்கு இரு நாடுகளும் தங்கள் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வருகின்றன.