வட சிக்கிமில் வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த 3 சீனர்களுக்கு இந்திய ராணுவம் உணவு, உடை மற்றும் ஆக்ஸிஜன் கொடுத்து உதவியுள்ளது.
செப்டம்பர் 3ஆம் தேதி, வட சிக்கிமில் 17,500 அடி உயரத்தில் உள்ள பிளட்டேயு என்ற பகுதியில் 3 சீனர்கள் வழிதவறி வந்துவிட்டனர். அவர்களை காப்பாற்றி விசாரித்த இந்திய ராணுவம் அவர்களுக்கு உணவு, கதகதப்பான உடை மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றைக் கொடுத்து சரியான இடத்திற்குச் செல்ல வழிவகை செய்துகொடுத்திருக்கின்றனர்.
சீன மக்களை இந்திய ராணுவம் கடத்துகிறது என எழுந்த புகாரையடுத்து இந்திய ராணுவம் இந்த தகவலை வெளியிட்டுள்ளLது. அருணாச்சல பிரதேசத்தில் சபன்சிரி மாவட்டத்தில் வேட்டைக்குச் சென்ற 5 பேர் காணாமல் போய்விட்டதாக அவர்களது குடும்பத்தினர் ஏற்கெனவே புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.