மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறதா சியாச்சின் பனிச்சிகரம் ?

மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறதா சியாச்சின் பனிச்சிகரம் ?
மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறதா சியாச்சின் பனிச்சிகரம் ?
Published on

சியாச்சின் பனிச்சிகரத்தை மக்கள் பார்வைக்கு திறக்க ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்தது. இந்த ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது. 

இந்நிலையில் லடாக் பகுதியிலுள்ள சியாச்சின் பனிச்சிகரத்தை மக்கள் பார்வையிட ராணுவம் அனுமதியளிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சியாச்சின் பனிச்சிகர பகுதி உலகிலேயே மிகவும் உயரமான போர் பதட்டம் நிலவும் பகுதியாகும். இந்தப் பகுதியில் கடும் குளிர் நிலவும். அத்துடன் பனி சரிவுகள் சர்வ சாதாரணமாக நிகழும். மேலும் இந்தப் பகுதி பாகிஸ்தான் நாட்டிற்கு அருகில் உள்ளதால் ராணுவ வீரர்கள் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இந்தக் கடுமையான பகுதியில் ராணுவ வீரர்கள் மிகவும் கடினமாக வாழ்ந்து பாதுகாத்து வருகின்றனர். ராணுவ வீரர்களின் நிலையை மக்கள் பார்வையிட இந்தப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ராணுவப் படை தளபதி பிபின் ராவத் ஒரு விழாவில் பேசும்  போது, “ராணுவ வீரர்களின் வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சில ராணுவ பயிற்சி இடங்கள் மக்கள் பார்வைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் சியாச்சின் பனிச் சிகர பகுதியும் மக்கள் பார்வைக்கு திறக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com