ராணுவ வீரர்களுக்காக 3டி தொழில்நுட்ப முறையில் அடுக்குமாடி வீடு - அசத்தும் இந்திய ராணுவம்

ராணுவ வீரர்களுக்காக 3டி தொழில்நுட்ப முறையில் அடுக்குமாடி வீடு - அசத்தும் இந்திய ராணுவம்
ராணுவ வீரர்களுக்காக 3டி தொழில்நுட்ப முறையில் அடுக்குமாடி வீடு - அசத்தும் இந்திய ராணுவம்
Published on
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 3டி அச்சுமுறையில் முதன் முதலாக குடியிருப்பு கட்டிடத்தை இந்திய ராணுவம் திறந்துள்ளது.
அகமதாபாத்தின் கண்ட் பகுதியில் 3டி அச்சு முறையில் ராணுவ வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட இரண்டு அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டிடத்தை ராணுவம் திறந்துள்ளது. மிக்காப் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ராணுவ பொறியியல் சேவை அமைப்பு, 3டி விரைவுக் கட்டுமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கட்டிடத்தைக் கட்டியுள்ளது.

முப்பரிமாண தொழில்நுட்ப அச்சாக்க முறையைப் பயன்படுத்தி அடித்தளம், சுவர்கள் மற்றும் ஜன்னல் அமைப்புகள்  கட்டப்பட்டுள்ளன. 71 சதுர மீட்டர் அளவுள்ள இந்தக் கட்டிடம் 12 வாரங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பேரிடர் பாதுகாப்பு கட்டமைப்புகள், நிலநடுக்கத்தை தாங்கும் கட்டிட அமைப்பு, பசுமைக் கட்டிடத் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றைக் கொண்டு இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினரின் நவீனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நவீன விரைவுக் கட்டிடத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த தொழில்நுட்பம் கணினி முறையின் கட்டிடத்தின் முப்பரிமாண வரைபடமும், கட்டிடப் பணிகளை மேற்கொள்ளுவதற்கான அச்சு இயந்திரமும் இணைக்கப்பட்டு இயந்திரம் இயங்கும் போது கட்டிட வரைப்படத்திற்கு ஏற்ப கான்கிரீட் கலவை வெளியேற்றப்பட்டு முப்பரிமாண முறையில் கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com