பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை - ராணுவ அதிகாரி நீக்கம்

பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை - ராணுவ அதிகாரி நீக்கம்
பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை - ராணுவ அதிகாரி நீக்கம்
Published on

பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய ராணுவ அதிகாரி நீக்கப்பட்டுள்ளார்.

மேஜர் கலோன் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர். அவர் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் மேஜராக பொறுப்பு வகித்து வந்தார். தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பெண் கேப்டன் ஒருவர் 2016ம் ஆண்டு கலோன் மீது புகார் கொடுத்தார். ஆனால், அந்த புகாரை அவர் மறுத்தார்.

இந்த புகார் தொடர்பாக ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், மேஜர் கலோன் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இதனை தலைமை தளபதி பிபின் ராவத் உறுதி செய்துள்ளார். மேஜருக்கான பென்ஷன் தொகையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com