இந்தோ-திபெத் எல்லைப் பகுதியில் உறைய வைக்கும் பனிப்பொழிவுக்கு இடையே எல்லை பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபடும் காட்சி வெளியாகியுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 15 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. பூஜ்ஜியம் டிகிரி செல்ஷியசிற்கும் கீழ் வெப்பநிலை நிலவும் நிலையில், அதற்கு மத்தியிலும் எல்லை பாதுகாப்புப் படையினர், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரத்தத்தை உறைய வைக்கும் பனியில், பாதுகாப்புப் படையினர் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை பாராட்டி, சமூக வலைதளங்களில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.