டைம் இதழின் 2020-க்கான சிறந்த குழந்தையாக 15 வயது கீதாஞ்சலி தேர்வு!

டைம் இதழின் 2020-க்கான சிறந்த குழந்தையாக 15 வயது கீதாஞ்சலி தேர்வு!
டைம் இதழின் 2020-க்கான சிறந்த குழந்தையாக 15 வயது கீதாஞ்சலி தேர்வு!
Published on

பெரும்பாலும் குழந்தைகளுக்கு பெரியவர்கள்தான் ரோல் மாடலாக இருப்பார்கள். சமயங்களில் சில குழந்தைகள் தன் வயது பிள்ளைகளுக்கு மட்டுமல்லாது, பெரியவர்களுக்கும் ரோல் மாடலாக இருப்பார்கள். அவர்களில் ஒருவர்தான் 15 வயது சிறுமியான கீதாஞ்சாலி ராவ். டைம் இதழின் 2020-க்கான சிறந்த குழந்தையாக அவர் தேர்வாகியுள்ளார்.

சுமார் 5000 போட்டியாளர்களுக்கு மத்தியில் சமூகத்திற்காக ஆக்கபூர்வமான வகையில் அறிவியல் கருவிகளை வடிவமைத்தமைக்காக அமெரிக்க வாழ் இந்தியரான கீதாஞ்சலி, நடுவர் குழுவினரால் சிறந்த குழந்தையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

TETHYS கருவியின் மூலம் நீரில் கலந்துள்ள மாசு தன்மையை குறித்து அறிந்துகொள்வது குறித்த அவரது கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது. அதுமட்டுமல்லாது சைபர் புல்லியிங் எனப்படும் இணையதள சீண்டல்கள், போதைப்பொருளுக்கு அடிமையாவதிலிருந்து மீள்வது உள்ளிட்ட சமூகப் பிரச்னைகள் குறித்தும் விழிப்புணர்வூட்டி வருபவர். 

“என்னால் முடிகிறது என்றால் உங்களாலும் முடியும். நம் எல்லோராலும் முடியும்” என்கிறார் சிறுமி கீதாஞ்சலி.

நன்றி : டைம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com