மீண்டும் உச்சம் : இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

மீண்டும் உச்சம் : இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

மீண்டும் உச்சம் : இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
Published on

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்ததுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின் படி நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 1,17,100 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொட்டால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,52,26,386 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று மட்டும் 30,836 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தமாக இதுவரை 3,43,71,845 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நாடு முழுவதும் இன்று மட்டும் 302 பேர் கொரோனா பாதிப்பால் சிசிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 4,83,178 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் 3,71,363 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 97.57 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.37 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் 94,47,056 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

இதுவரை மொத்தமாக 1,49,66,81,156 டோஸ்கள் இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,007 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 1,199 பேர் ஒமைக்ரானில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் தற்போது 1,808 பேர் ஒமைக்ரானுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com