தொழிலாளர்களின் உரிமை பாதுகாப்பு: பின்தங்கிய இந்தியா

தொழிலாளர்களின் உரிமை பாதுகாப்பு: பின்தங்கிய இந்தியா
தொழிலாளர்களின் உரிமை பாதுகாப்பு: பின்தங்கிய இந்தியா
Published on

தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாப்பதில் இந்தியா 151-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

உலக அளவில் தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் குறியீட்டு நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்தங்கி உள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 141-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 151-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பலவீனமான தொழிலாளர் உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் இந்தியா 151-வது இடத்திற்கு சரிந்துள்ளதாக சமீபத்திய ஆக்ஸ்பாம் சர்வதேச அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆய்விற்கு 158 நாடுகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஒட்டுமொத்தமாக, அரசாங்க கொள்கைகள், கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, வரிவிதிப்பு மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் ஆகியவற்றின் பொது சேவைகள் தொடர்பான நடவடிக்கைகளில் 158 நாடுகளில் இந்தியா 129-வது இடத்தில் உள்ளது.

தொற்றுநோய் காலங்களில் சமத்துவமின்மை அதிகரித்துக் காணப்படுவதாகவும், சமத்துவமின்மையை சரிபடுத்துவதற்கான தீர்வுகளை காண அரசு முயற்சி எடுக்க வேண்டியது அவசியமெனவும் ஆக்ஸ்பாம் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com