இந்தியாவில் ஏப்ரலை விட, மே மாதத்தில் 28.7% குறைந்த தடுப்பூசி செலுத்துதல் விகிதம் : ஆய்வு

இந்தியாவில் ஏப்ரலை விட, மே மாதத்தில் 28.7% குறைந்த தடுப்பூசி செலுத்துதல் விகிதம் : ஆய்வு
இந்தியாவில் ஏப்ரலை விட, மே மாதத்தில் 28.7% குறைந்த தடுப்பூசி செலுத்துதல் விகிதம் : ஆய்வு
Published on

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதாச்சாரம் ஏப்ரலை விட மே மாதத்தில் 28.7% குறைந்துவிட்டது என்று ப்ளூம்பெர்க் குயிண்ட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் மந்தமானது. ஏப்ரல் மாதத்தில் 7.75 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி, மே மாதத்தில் 28.7% குறைந்து 5.53 கோடி தடுப்பூசி டோஸ்களாக இருந்தது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் குயின்ட் நடத்திய ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கோவிட் -19 தடுப்பூசி இயக்கம் மே 1ஆம் தேதி முதல் வயதுவந்த அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தை அறிவித்தது. ஆனால் மத்திய அரசின் இரட்டை கொள்முதல் தடுப்பூசி கொள்கை காரணமாக, மாநிலங்களிடம் போதிய தடுப்பூசி கையிருப்பு இல்லாததும் தடுப்பூசி இயக்கம் மந்தமாக முக்கிய காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மத்திய அரசின் தடுப்பூசி கொள்முதல் கொள்கைகளின்படி தடுப்பூசி தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதம் மத்திய அரசுக்கு நேரடியாக வழங்கும், மற்ற 50 % தடுப்பூசிகளை மாநில அரசுகளும், தனியாரும் நேரடியாக நிறுவனங்களிடம் வாங்கிக்கொள்ளவேண்டும்.

ஜூன் மாதம் தடுப்பூசி இயக்கம் மீண்டும் வேகமெடுக்கும் என கூறப்படுகிறது, கோவாக்சின், கோவிஷீல்டு உடன் ஸ்புட்னிக் தடுப்பூசி மற்றும் மாநில அரசுகள் உலகளாவிய டெண்டர் மூலமாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதால்  ஜூன் மாதத்தில் நாட்டில் 12 கோடி தடுப்பூசி கிடைக்கும் என்றும், இதனால் தடுப்பூசி செலுத்துதல் விகிதம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com