பல மொழிகளில் பதவியேற்ற மக்களவை உறுப்பினர்கள்

பல மொழிகளில் பதவியேற்ற மக்களவை உறுப்பினர்கள்
பல மொழிகளில் பதவியேற்ற மக்களவை உறுப்பினர்கள்
Published on

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் தொடர் என்பதால்  தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில் பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதி எம்பியாக பதவியேற்றார். தொடர்ச்சியாக அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரும் மக்களவை எம்பிகளாக பதவியேற்றனர். 

அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ஹர்சிம்ரத் கவுர் பாதல் உள்ளிட்டோருக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அமைச்சர்கள் சதானந்த கவுடா, பிரகலாத் ஜோஷி ஆகியோர் கன்னடத்திலும், அமைச்சர் ஜிதேந்திர சிங் டோக்ரி மொழியிலும், ரமேஸ்வர், நபா குமார் உள்ளிட்ட எம்பிக்கள் அசாம் மொழியிலும் பதவியேற்றுக் கொண்டனர். 

சிவசேனா எம்பி அரவிந்த் சாவன் மராத்தியிலும்,, ஆந்திராவை சேர்ந்த ‌பல எம்பிக்கள் தெலுங்கிலும் பதவியேற்றனர். அதேபோல ஜம்மு-காஷ்மீரின் எம்பியான ஃபரூக் அப்துல்லா காஷ்மீரி மொழியில் பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து கர்நாடகா மாநில எம்பிக்கள் கன்னட மொழியில் பதவியேற்றனர். இவர்களில் அனந்த் குமார் ஹெக்டே மட்டும்  சமஸ்கிருதத்தில் பதவியேற்றார். கேரளா சார்பாக எம்பிக்கள் பதவியேற்கும் போது ராகுல் காந்தியும் பதவியேற்றார். அவர் ஆங்கிலத்தில் பதவியேற்றார். 

இவர்களைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தின் எம்பிக்கள் பதவியேற்றனர். இவர்கள் அனைவரும் இந்தியில் பதவியேற்றனர். நாளைய தினமும் எம்பிக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி தொடர உள்ளது. மக்களவைத் கூட்டத்தொடரில் நாளை மறுதினம் சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் வியாழன் அன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.‌ ஜூலை 5ஆம் தேதி மத்திய அமைச்சர்‌ நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com