இந்தியாவின் முதலாவது தனியார் ரயில் சேவை அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளதாக இந்திய ரயில்வே துணை நிறுவனமான ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
ரயில்வேயில் சில ரயில்களை தனியார் இயக்க அனுமதிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி, ரயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி-யின் (IRCTC) வசம் 2 தேஜாஸ் ரயில்களை தனியாருக்கு விட அரசு அனுமதித்துள்ளது. இந்த ரயில்களின் இயக்கச் செலவு, பயணச் சீட்டு விற்பனை ஆகியவற்றை மட்டும் தனியார் மேற்கொள்ள அனுமதிக்கப்பட உள்ளது.
அக்டோபரில் முதல் தனியார் ரயில் டெல்லி, லக்னோ இடையே இயக்கப்பட உள்ளது. அந்த ரயிலில் பயணிகளுக்கு 50 லட்ச ரூபாய் வரை விபத்துக் காப்பீடு வழங்கப்படுவதுடன், ரயில் தாமதமானால், தாமதமாகும் நேரத்துக்கேற்ப இழப்பீடும் வழங்கப்படவுள்ளது.