நாட்டின் ஏற்றுமதி 2 மாதங்களுக்குப் பிறகு அரை சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் 2,87,000 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இறக்குமதியும் 1.6 சதவிகிதம் அதிகரித்து 4,59,000 கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டுள்ளதக கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்திருந்த வர்த்தக பற்றாக்குறை செப்டம்பரில் சற்று குறைந்திருக்கிறது. சர்வதேச அளவில் நிகழும் பதற்றங்களுக்கு மத்தியில் செப்டம்பர் மட்டுமல்ல, நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களிலும் இந்தியாவின் ஏற்றுமதி சாதகமான சூழலில் இருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சக செயலர் சுனில் பரத்வால் தெரிவித்துள்ளார்.