"இந்தியா தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காது" - ட்ரம்ப்புக்கு மத்திய அரசு பதில் !

"இந்தியா தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காது" - ட்ரம்ப்புக்கு மத்திய அரசு பதில் !
"இந்தியா தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காது" - ட்ரம்ப்புக்கு மத்திய அரசு பதில் !
Published on


சீனாவுடனான எல்லைப் பிரச்னையை சுமூகமாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

இந்திய - சீன எல்லையில் சில நாள்களாகப் பதற்றமான சூழல் நிலவுகிறது. கடந்த 5ம் தேதி காஷ்மீர் அருகே உள்ள கிழக்கு லடாக் பகுதிக்குள் சீன வீரர்கள் புகுந்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்பும் தாக்கிக்கொண்டனர். இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் தலையிட்டதை அடுத்து அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் வட கிழக்கு மாநிலமான சிக்கிமிலும், சீன எல்லையில் வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதனிடையே சில நாள்களுக்குப் பிறகு சீன ராணுவ ஹெலிகாப்டர் அத்துமீறி நுழைந்ததாகவும் கூறப்பட்டது. இப்படித் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய-சீன எல்லையில் இருதரப்பினரும் வீரர்களைக் குவித்து வருகின்றனர்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். அதில் "இந்திய-சீன எல்லைப் பிரச்னையை பேசித் தீர்க்க மத்தியஸ்தராக இருக்க அமெரிக்கா தயாராக இருக்கிறது. இது குறித்து இந்தியா மற்றும் சீனாவிடம் தெரிவித்துள்ளோம்" என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறும்போது " தூதரக ரீதியில் இந்தியா - சீனா இடையிலான பிரச்னைகள் பேசப்பட்டு வருகிறது. எல்லையில் அமைதியை நிலை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்துள்ளன. இதுதொடர்பாக பல ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளோம். எல்லையில் நமது படைகள் சிறப்பாகச் செயல்பட்டுப் பாதுகாப்புப் பணியை மேற்கொள்கின்றன. இந்தியத் தலைமையின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியா தனது எல்லையையும், இறையாண்மையையும் விட்டுக்கொடுக்காது" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com